Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் அனைவரும் தங்களது படிப்பை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களின் நிலைமை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021 ஆண்டு மே மாதம் வரை கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்கப்படாத நிலையில், 26 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக சமூகநலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 104 புகார் வந்த நிலையில், 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |