Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கைக்குழந்தையை… சாலையோரம் வீசிச் சென்ற… கொடூர தாய்… போலீஸ் வலைவீச்சு…!!!

மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனை அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையின் அருகே இன்று அதிகாலை நேரத்தில் நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டு இருக்கிறது. அதனைக் கேட்ட ஆட்டோ ஓட்டுனரான மோகன் என்பவர் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது.அதன்பிறகு அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருக்கின்ற குழந்தை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் இரண்டு பெண்கள் குழந்தையை வீசி சொல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் பெண்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |