மதுரையில் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை சுமார் 4,380 என இருந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மதுரையில் இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4640 ஆக உள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1070 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 3199 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உள்ளது. கடந்த சில நாட்களில் 200 க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிப்படைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.