Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் டைடல் பார்க்” இது இல்லாட்டி ரொம்ப கஷ்டம்…. சிக்கலில் மாநகராட்சி….. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதாவது டைடல் பார்க் நிறுவனத்தால் இளைஞர்கள் வேலை தேடி பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு பெருகும். தமிழக அரசு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்ட ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம். ஆனால் ஊழியர்கள் நிறுவனத்திற்கு வருவதற்கு போதிய பேருந்து வசதி, தரமான சாலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்ற பல்வேறு வசதிகள் பகுதியில் இருக்க வேண்டும்.

இது போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்படுவதால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் மதுரை மாவட்டத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, ஒரு இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் செய்திகள் உலா வருகிறது. அப்படி இருக்கும்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்தால் அதை எப்படி சமாளிக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதன் பிறகு மதுரை மாவட்டம் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் அதற்கு ஏற்ப சாலைகளை விரிவுபடுத்தி, சர்வீஸ் சாலைகள் மற்றும் பைபாஸ் சாலைகள் என தேவைக்கேற்ப அமைக்க வேண்டும்.

அதோடு பேருந்து வசதிகளுக்காக முக்கிய சந்திப்புகளில் பாலங்கள் கட்டப்படுவதோடு, மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் போன்ற திட்டங்களையும் கொண்டு வர வேண்டும். இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தினாலே போதும் என்கிறார்கள் சிலர். ஆனால் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் மழைக்காலங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மதுரை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |