Categories
மாநில செய்திகள்

மதுரையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…. தமிழக முதல்வருக்கு திடீர் கோரிக்கை….!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்ததை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் மத்தியிலாலும் மோடி அரசு அம்பானி மற்றும் அதானி குழும்பங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எந்த ஒரு வரியும் விதிக்காமல் அவர்களுக்கு லாபத்தை ஈட்டுவதற்கு வழி விடுகிறது. ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு மற்றும் மோடி அரசு ஜிஎஸ்டி வரியை உயர்த்தி உள்ளது. இந்த வரியை அதானி மற்றும் அம்பானி குழும்பங்களுக்கு விதித்து லாபம் ஈட்ட வேண்டி தானே. இந்த விலைவாசி உயர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்பதற்காக 10 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

அதன் பிறகு மதுரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்றார். இதனையடுத்து ஓரிரு பொருட்களுக்கு மட்டும் வரியை குறைத்து விட்டு நம்மை ஏமாற்றும் மத்திய அரசு, சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மட்டும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கருப்பு பணம் என கருதக்கூடாது என்று சொல்கிறார்கள். இந்த கருப்பு பணத்தை எல்லாம் ஒரு வேளை வெள்ளை பணமாக மாற்றி இருப்பார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் தமிழக அரசு தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார். ஆனால் மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |