Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரையில் போட்டியிடுவாரா ஸ்டாலின்?… சவால் விடுத்த அமைச்சர்…!!!

திமுக தலைவர் ஸ்டாலினால் மதுரையில் போட்டியிட முடியுமா என அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஸ்டாலின் மதுரையில் போட்டியிட முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் சென்னையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரால் முடிந்தால் மதுரையில் போட்டியிடட்டும் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். முக.அழகிரி இருக்கும் தைரியத்தில் தான் அமைச்சர் இவ்வாறு பேசுகிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |