மதுரை மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மேலும் நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.; அதன் பலனாக கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. கடந்த ஒரு மாதங்களுக்குப் பிறகு 1200க்கும் கீழ் நேற்று கொரோனா பாதிவாகியது. சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் வேகமெடுத்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக மதுரை அடுத்த சென்னை ஆக மாறும் அளவிற்கு கொரோனா பரலை கொண்டுள்ளது. நேற்றைய நிலவரம் படி மதுரையில் 5757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1803 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 3843 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள். 111 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு முடிவடைய இருக்கிறது.
இதையடுத்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துக்குள்ளார். இதுகுறித்து அமைச்சர் பேசும் போது தீவிர காய்ச்சல் சிகிச்சை முகாம் நல்ல பலனை கொடுத்துள்ளது. ஆரம்ப நிலையில் கண்டறிந்துள்ளோம்.
இதனை இன்னும் தொடரலாம் என்ற அடிப்படையிலேயே காய்ச்சல் முகாம்களை இன்னும் தீவிரமாக கிராமப் பகுதியில், எல்லைப் பகுதிகளிள் செயல்படுத்த முழு ஊரடங்கு நமக்கு நல்ல பலனைத் தந்து இருக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த கவனத்திற்கு கொண்டு சென்று ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைப்போம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.