மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரகு ராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது. பின்னர் தங்களிடம் இருந்த கத்திரிக்கோலை வைத்து ராகு ராஜை குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது.
இதில் படுகாயமடைந்த ரகுராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் குமார் என்பவருடன் இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. தப்பி ஓடிய ராஜேஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.