மதுரை நகரில் போர் வீரரின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
நாட்டிற்காக போரிட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் அமைக்கும் வழக்கம் பண்டைய காலங்களில் இருந்துள்ளது. இந்த நடுகல்லில் இருக்கும் குறிப்புகள் மூலம் தொல்பொருள் ஆய்வாளர்கள் பழங்கால நடைமுறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது மதுரை முனி சாலை பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் கால நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. போரில் உயிர்நீத்த வீரனுடன் அவனது மனைவி உடன்கட்டை ஏறி உயிரிழந்ததன் நினைவாக இந்த நடுகல் அமைக்கப்பட்டுள்ளது என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.