தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், மதுரையில் இரவு திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் பல இடங்களில் சாலை வெள்ளக் காடாக மாறின. மீனாட்சி அம்மன் கோயில் உட்புறம் வெள்ள நீர் புகுந்ததில் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதுவரை கனமழைக்கு அங்கு 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.