மதுரை அரசு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவர் மருந்து பெட்டிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவர் மருந்து பெட்டிகள் காணவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காவல்துறையிடம் அளித்துள்ளது. புகாரை தொடர்ந்து மருத்துவமனையின் கீழ் செயல்படகூடிய மருந்துகள் சேமிப்பு கிடங்கில் பணிபுரியக் கூடிய ஊழியர்கள் மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் தனிதனியாக விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையிலும், காலிப்பெட்டிகளில் உள்ள கைரேகை குறித்து ஆய்வுசெய்தும் மருந்துகளை கொள்ளையடித்து சென்ற நபர்கள் குறித்து மதிச்சியம் குற்றபிரிவு காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்தாக வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டு அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
ரெம்டெசிவர் மருந்து பெறும்போது மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளியின் உடல்நலம், ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்பித்தால் மட்டுமே ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படும் என்ற நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவர் மருந்துகள் எப்படி வெளி சந்தையில் விற்பனைக்கு செல்கிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.