Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் செயலாளர் வீட்டிற்க்கு தீ வைப்பு …!!

மதுரையில் ஊராட்சிமன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர். இருவரின் உடல்களும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான குன்னத்தூரில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குன்னத்தூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பணியாற்றி வரும் செயலாளர் வீரனன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவருடைய வீட்டை ஊர் பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர். கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |