மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர் RV. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அமைக்கப்படயுள்ளது என்றார். கொரோனா காலகட்டத்தால் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்றார் அவர்.
உலக வங்கின் நிபந்தனைகள் நிறைவேற்றிய பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மீண்டும் உலக வங்கி குழு பார்வையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகே உலக வங்கி கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த கடன் எப்போது கிடைக்கும். எப்போது கட்டுமான பணிகள் தொடங்கும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.