Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்-க்கு 8 உதவிப்பேராசிரியர்கள்…. பிப்…18 கடைசி தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

கடந்த 2015 வருடம் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தமாக 4 மாநிலங்களில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரையை தவிர்த்து மற்ற 3 மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரையிலும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை, அரசாணை வெளியிடவில்லை என்று பல்வேறு புகார்களை குவிந்து வருகிறது. எனினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையில் கடந்த வருடம் டிசம்பர் 21-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் நடப்பு கல்வியாண்டில் 50 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு உறுதியாக இருக்கிறது எனவும் கூறினார். இதையடுத்து தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ்-யில் 5 துறைகளில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக எய்ம்ஸ் செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதாவது, Anatomy, Bio chemistry, Community, Family Medicine, Physiology என்று 5 துறைகளில் பணியாற்ற 8 உதவிப் பேராசிரியர்கள் தேவை என செயல் இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த பணிகளுக்கு www.jipmer.edu.in/aiims-madurai இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 18 தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |