Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தலைவர் நியமனம்…. யாருன்னு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனும் அறிவிப்பு சென்ற 2015ம் வருடம் பிப்ரவரியில் வெளியாகியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு கடந்த 2019ம் வருடம் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குரிய கட்டுமானப் பணிகளானது இதுவரை நிறைவடையாத சூழ்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான MBBS வகுப்புகள் கடந்த வருடம் முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தலைவர்ஆக நரம்பியல் சிறப்பு மருத்துவரான வி.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை டாக்டா் எம்ஜிஆா், மருத்துவப் பல்கலையில் கௌரவப் பேராசிரியராகவும், பெங்களூரு தேசிய மனநல அகாதெமி உறுப்பினராகவும் அவா் இப்போது பொறுப்பு வகித்து வருகிறாா். அதேபோல் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி நெறிசாா் குழுத்தலைவராகவும், தேசிய மருந்தியல் நிறுவனத்தின் இயக்குநா் தோ்வுக் குழுத் தலைவராகவும் டாக்டா் நாகராஜன் இருக்கிறார்.

Categories

Tech |