மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய இருப்பதாக சொல்லப்படுகின்றது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கின்றது. இதற்கு சென்ற 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மருத்துவமனைக்கு மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டிருக்கின்றது.
இதனால் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனை அமையும் இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரையிலுமாக 35 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான வழித்தடமாக இருக்கலாம் என தெரிகின்றது. அதிகாரிகள் மதுரை ஐகோர்ட், வைகை ஆறு, பெரியார் நிலையம், திருப்பரங்குன்றம் வழியாக மருத்துவமனை வரை இருக்கும் வழித்தடங்களை ஆய்வு செய்தார்கள்.