Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது முடியும்?…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

தர்மபுரியில் நடந்த பா.ஜ.க கூட்டத்துக்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது “தமிழகம் பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம் ஆகும். மத்திய அரசானது மக்கள் நலனில் அக்கறைகொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளானது கொரோனா காரணமாக தடைப்பட்டது.

மத்திய அமைச்சரவை இதற்கென நிதியை ஒதுக்கியது. தற்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டு 1977 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி பணிகளானது நடந்து வருகிறது. தற்காலிகமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பிஎஸ் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று, வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் 2026ம் வருடத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளானது முழுமையாக முடிவடையும்” என அவர் கூறினார்.

Categories

Tech |