Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்…. எப்போது முடிக்கப்படும்?…. மத்திய அரசு தகவல்…..!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான நிதி ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணையின் போது மத்திய அரசானது 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இப்போது வரை துவங்கப்படவில்லை.

ஆகவே மத்திய முதன்மை செயலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா..? இல்லையா..? என்பது பற்றி முடிவெடுக்க நீதிபதிகள் ரமேஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கென மொத்தம் ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதை கட்டுவதற்கான காலம் 5 ஆண்டு 8 மாதம் (மார்ச் 2021 -அக்டோபர் 2026) ஆகும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி அதிக செலவு மற்றும் அதிக நேரத்துக்கான அனுமதி மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கி செலவினதுறை பரிசீலனையில் இருக்கிறது. அத்துடன் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளகூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் நீதிபதிகள் எவ்வாறு அக்டோபர் 2026-ல் பணிகள் முடிவடையும் என்பது குறித்த நிலை அறிக்கையை மத்திய முதன்மை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.

Categories

Tech |