Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடங்கியது….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மறைந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலன் எனவும் பல முறை சிறை சென்ற அவர் சுய மரியாதை, சமத்துவம் ஆகியவற்றில் முழு ஈடுபாடு கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவம் கல்லூரியில் மாணவர் சேர்க்கையானது தொடங்கி இருக்கிறது. தமிழக அரசு அளித்த ஒப்புதலின்படி மதுரை எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. மதுரை எய்ம்ஸி-ல் இடம் கிடைக்கும் மாணவர்கள் 50 பேரும் ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவம் கல்லூரியில் படிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவம் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து காக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறினார்…

Categories

Tech |