மதுரை-சிங்கப்பூர் விமான சேவை அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் இயங்க போவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை முன்னதாகவே இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்ததன் காரணமாக நாடு முழுவதும் சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது . தற்சமயம் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் மார்ச் 29ம் தேதி முதல் வாரத்திற்கு 2 நாட்கள் சிங்கப்பூருக்கு மீண்டும் விமானம் செயல்ப்பட உள்ளது. அதாவது செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டும் விமானம் செயல்படும். சிங்கப்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானம், மாலை 6:40 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வந்து சேரும் . அதை தொடர்ந்து அதே விமானம் மதுரையில் இருந்து இரவு 9:35 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் வந்து சேரும். விமான சேவை டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கபட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.