கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை சித்திரை திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு போலவே கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கோவில் வளாகத்திலேயே நடைபெறும் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.