ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இதையடுத்து கர்நாடகாவில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற சிறையில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைதொடர்ந்து மதுரை மத்திய சிறைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைத்து வரப்பட்டார்.