சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு வந்து, பின்னர் சாத்தான்குளம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி அதிகாரிகயிடம் பெற்று விசாரணையை தொடங்க இருப்பதாக நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நிலையில் தற்போது சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து தந்தை – மகனை அடிக்க காவல்துறையினர் பயன்படுத்தி லத்தி உள்ளிட்ட பொருட்களும், அது தொடர்பான தடயங்களும் மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தற்போது ஒப்படைக்கப்படுள்ளது.