மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மீது கொடூரமான முறையில் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசு, காளைகள் மீது சூடான எண்ணெய் ஆசிட் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து மக்கள் கூறும் போது, “ மாடுகளின் நிலைமை குறித்து தன்னார்வ அமைப்பு கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அத்துடன் மாடுகளின் அமிலம் வீசிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்நிலையில் வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தினால் சம்பந்தப்பட்டவர் மீது விளங்குவதை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.