Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே உஷார்… நெருங்குகிறது ஆபத்து…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் புயலின் தாக்கம் மதுரை வரையில் இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் புயலால் திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குமரி மாவட்டத்திலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |