Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே… எப்போ வேணாலும் வரும்… கொஞ்சம் உஷாராவே இருங்க…!!!

மதுரை மாவட்டத்தில் வைகை அணை திறப்பால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடந்த பிறகு டிசம்பர் 4ஆம் தேதி தென்தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கிறது.

அதனால் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பால் மதுரையில் உள்ள கல்பாலம், குருவிக்காரன் என மூன்று பாலங்கள் நீரில் மூழ்கியது. மூன்று தரை பாலங்களும் நீரில் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |