Categories
மாவட்ட செய்திகள்

மதுரை மக்களே…. தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநகராட்சி அதிரடி உத்தரவு…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்  பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரேஷன் கடை, வர்த்தக நிறுவனங்கள், திரையரங்கு, சூப்பர் மார்க்கெட், கடைவீதிகள், துணிக் கடைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட 18 பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |