தமிழகம் முழுவதும் இன்று 5வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் நடிகர் சசிகுமார் மதுரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதல் அலை இரண்டாம் அலை நிறைய பாதிப்புகளை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள நிலையில் மூன்றாவது அலை வரப்போகிறதாக கூறுகிறார்கள்.
எனவே மதுரை மாவட்டத்தில் இன்று 5 வது முறையாக தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா பெரும் தொற்றை தடுக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அவர்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும். தமிழக அரசு மக்களின் நல்லதுக்கு தான் தடுப்பூசி எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
@SRajaJourno @ptrmadurai @pmoorthy21 @Subramanian_ma அனைவருக்கும் வணக்கம் மதுரை மண்ணில் பிறந்த இயக்குனர்/தயாரிப்பாளர்/நடிகர் சசிகுமார் சார் நம் மதுரை மாவட்டம் மக்களை கொரோனா தடுப்பூசி திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.. நம் துறை சார்பாக அவர்களுக்கு நன்றி.. pic.twitter.com/WT5aBcP0wN
— Paraneetharan.A (@tharanfilmmaker) October 9, 2021