மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்,நிதிஷ் குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த சையது இப்ரஹிமிடம் கஞ்சா கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் இரு பிரிவினரும் மோதிக்கொண்டதில் இரண்டு கைதிகள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் பிரச்சனை ஏற்படாத வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
Categories