நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது.
எனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13-ம் தேதி முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஏதாவது ஓர் சான்றிதழை பக்தர்கள் வழங்கினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது