தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று முதல் காலை 6 மணி முதல் மதியம் 12 30 மற்றும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலில் நடைபெறும் கால பூஜை அபிஷேகங்களை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலில் தரிசனம் செய்த பின் எந்த ஒரு இடத்திலும் உட்கார பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கோயிலுக்குள் தேங்காய் பழம் கொண்டு வர தடை. அர்ச்சனை செய்வதற்கும் அனுமதிஇலை என்று அறிவித்துள்ளது.