மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 14-ஆம் தேதி முதல் 23 தேதி வரை நடக்க உள்ளது.
இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மேலும் வருகின்ற 19ஆம் தேதி பெரிய கார்த்திகை அன்று மாலை 6 மணிக்கு கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.
மேலும் அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்குச் சித்திரை வீதிகளில் அம்மன் சன்னதி சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளி அங்கு சொக்கப்பனை ஏற்றப்படும் உள்ளது.