Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 ஆண்டுகளில்…. முதல்வர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து அந்த மண்டபத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் தற்போது வரையிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது.

இதற்கிடையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்று பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |