மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் வந்துள்ளார். இவர் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். பின் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ள அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். இதையடுத்து கோவிலுக்கு சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சாமியை வழிபாடு செய்தார். பின் அவருக்கு தீபாராதனை காண்பித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னதி வழியாக வந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர் பி உதயகுமார் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு உதயகுமாரின் மகளும், அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி சால்வை அணிவித்து கெளரவித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்ற போதும் அவர் பேட்டி கொடுக்காமல் காரில் ஏறி கிளம்பி சென்றுவிட்டார்.