Categories
தேசிய செய்திகள்

மதுரை மீனாட்சி டூ திருப்பதி ஏழுமலையான்…. 7 நாட்கள் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு ரெடியா?….IRCTC அட்டகாசமான அறிவிப்பு….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வதற்கு ஐ ஆர் சி டி சி நிறுவனம் புதிய பேக்கேஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதே விமான பயணம் பேக்கேஜ். டெல்லியில் தொடங்கும் இந்த பயணம் சென்னை, திருப்பதி, மதுரை ராமேஸ்வரம்,கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு இந்த ஆன்மீக பேக்கேஜ் மூலம் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் ஏழு நாட்கள் மற்றும் 6 இரவுகள் அடங்கும். இந்த பயணத்தில் மூன்று நபர்கள் பயணித்தால் ஒரு நபருக்கான கட்டணம் 45,260 ரூபாய். இரண்டு நபர்களுக்கு 47,190 ரூபாய் மற்றும் ஒரு நபருக்கு 59,760 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு படுக்கையுடன் கூடிய வசதிக்கு 40 ஆயிரத்து 120 ரூபாய், படுக்கை இல்லாத வசதிக்கு 35 ஆயிரத்து 610 ரூபாய், இரண்டு முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு 28 ஆயிரத்து 820 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜில் விமான டிக்கெட்,தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து மடங்கும் என ஐ ஆர் சி டி சி அறிவித்துள்ளது.

Categories

Tech |