Categories
மாநில செய்திகள்

மதுரை மேம்பாலம் விபத்து…. 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு…!!!

மதுரை -நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த இரண்டு வருடங்களாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இன்று மாலை இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த  வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் மீது தல்லாகுளம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |