Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும்  ரயில் மாலை 3:20 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து மறுநாள் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு மாலை 3:35 மணிக்கு மதுரையை வந்தடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதனையடுத்து திருநெல்வேலியில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்படும் ரயில் ரயில் காலை 11:25 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். அதன்பிறகு திருநெல்வேலியில் இருந்து மதியம் ‌1:50 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 04:15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். இதற்கு முன்பாக செல்லும் ரயில் செங்கோட்டையில் மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மாலை 5:20 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதனையடுத்து செங்கோட்டையில் இருந்து காலை 10:05 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12:25 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்த ரயில் தென்காசி, கீழப்புலியூர், பாவூர்சத்திரம், மேட்டூர், கீழக்கடையம், ரவண சமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழாம்பூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கள்ளக்குறிச்சி, காரைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் நின்று செல்லும். மேலும் திருச்செந்தூரில் இருந்து காலை 10:15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5:45 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். இந்த ரயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சினாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நின்று செல்லும்.

Categories

Tech |