Categories
மாநில செய்திகள்

மதுரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. நாளை முதல் டோக்கன் வினியோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்றபடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தினமும் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீடு வீடாக டோக்கன் கொடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |