Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை வந்த 3 பேருக்கு தொற்று…. உருமாறிய கொரோனாவா….? ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்…!!

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக அங்கிருந்து தமிழகம் வந்தவர்கள் சுகாதாரத்துறை கண்டறிந்தது. அவ்வகையில் பிரிட்டனில் இருந்து மதுரை வந்தவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறையினர்கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 78 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவர் மதுரை தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இங்கிலாந்தில் இருந்து மதுரைக்கு 80 பேர் வந்த நிலையில் 78 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருவர் தலைமறைவாகி உள்ளனர். இந்நிலையில் நவம்பர் 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து மதுரைக்கு வந்த 38 பேர் குறித்த அறிக்கையை தமிழக சுகாதாரத் துறை மதுரை மாவட்ட சுகாதாரத் துறைக்கு அனுப்பியது அதன் அடிப்படையில் அவர்களில் 32 பேரை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 28 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் இருவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்றும் விடுபட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இவர்களில் ஒருவர் போலியான முகவரி கொடுத்து தலைமறைவானது தெரிய வந்துள்ளது.

இத்தனை பரிசோதனைகள் மேற்கொண்டதில் தொற்று உறுதியான மூன்று பேரும் தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதோடு இவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் இவர்களுக்கு வந்திருப்பது சாதாரண கொரோனாவா அல்லது புதிதாக உருமாறிய கொரோனாவா என்பது தெரியவரும்.

Categories

Tech |