Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரை AIIMS-க்கு இடமில்லை… இதுதான் ஈபிஎஸ் நிர்வாகத் திறமையா?… ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இடம் தரவில்லை என அம்பலமாகியுள்ளதாக மு க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “மதுரையில் AIIMS மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இடம் தரவில்லை என RTI- இல் அம்பலமாகியுள்ளது. ஐந்து ஆண்டுகள் இடைவெளி ஏன்? பேரம் நடக்கிறதா? இது தான் முதல்வர் ஈபிஎஸ் நிர்வாகத் திறமையா? தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு நாடகத்திற்கான ஏற்பாடா?. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |