நீலகிரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் , ஆயத்தீர்வைத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் எஸ்.பி.அம்ரித் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது மதுவிலக்கு, கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கரகாட்டம், தப்பாட்டம், கட்டக்கால் ஆட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் வருகிற 31-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் கலைக்குழுவினர் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.
இதற்காக 4 கலைக்குழுவினர் எருமாடு, அய்யன்கொல்லி, எடப்பள்ளி, எல்லநள்ளி போன்ற கிராமங்களுக்கு செல்ல உள்ளனர் என்று கூறியுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலர் சேகர்,கோட்ட ஆய அலுவலர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.