Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவால் ஏற்படும் தீமை…. குடியை மறப்போம்… குடும்பம் காப்போம்… விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்..!!

ஊட்டியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்ததில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக நடத்தப்பட்டது. இந்த பேரணியை  கலெக்டர் எஸ்.பி அம்ர்த் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணியில் போலீஸ் சுப்பிரண்டு ஆஷிஷ் ராவத், உதவி ஆணையர் சேகர், அரசுத்துறை அலுவலர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த பேரணி ஊட்டி ரயில் நிலையத்தில் தொடங்கி லோயர் பஜார், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை, சேரிங் கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்று முடிந்தது.

இப்பேரணியில் மது அருந்துவதால் குடும்பத்தில் பிரச்சனை, பொருளாதார பிரச்சனை, மது அருந்தி கொண்டு வண்டி ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு, குடியை மறப்போம் குடும்பம் காப்போம், மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு எனப் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவ மாணவிகள் சென்றுள்ளனர். மேலும் மது குடிப்பதால் ஏற்படும் தீமை குறித்து பல்வேறு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Categories

Tech |