மதுபோதையில் மனைவியை அரிவாளால் தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் காலனியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு கற்பகஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கற்பக ஜோதியை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மனைவியை தாக்கிய முனீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.