Categories
மாநில செய்திகள்

மதுவிற்பனை…. பிற்பகல் 2 – இரவு 8 மணி வரை ஏன் மாற்ற கூடாது?”…. பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படுவதில்லை என உறுதிபடுத்த முடியுமா? என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி..!!

பள்ளி மாணவர்களுக்கு  மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு மது விற்பனையை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன்பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்கள்..

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மற்றும் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.. அதில் ஒட்டுமொத்தமாக 2 மனுக்களிலும் தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தென்பகுதியின் 4 மாநிலங்களில் தமிழகத்தில் தான் குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மொத்த விற்பனையில் தமிழகமே பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என குறிப்பிட்டனர். அதற்கு அரசு தரப்பில் மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. அதுவே மதுவிற்பனைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்ற என ஏன் பரிசீலிக்க கூடாது? என கேள்வி எழுப்பினர்.. அதற்கு அரசு தரப்பில் கொரோனா காலகட்டத்திலேயே பிற மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் வாங்குவது சட்ட விரோதமாக நடைபெற்றுள்ளது.. இது தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மது பிரியர்கள் மாற்று வழியை யோசிக்கின்றனர் என குறிப்பிட்டனர். அதோடு 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுவிற்பனை செய்வதை தவிர்ப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் மாணவர்களுக்கு மது விற்பனை 100% செய்யப்படுவதில்லை என அரசு உறுதிப்படுத்த முடியுமா மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என உறுதியாக சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், அரசு இந்த விஷயத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை இடம் ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நீதிபதிகள் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுவிற்பனையை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் மற்றும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்தும், இது தொடர்பாக அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்..

Categories

Tech |