மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு அருகே நுள்ளிவிலை பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சகாயராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்துள்ளார்.
எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சகாயராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சகாயராஜ் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சகாயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இரணியல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.