Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுவை குடிக்க வைத்து…. ஏடிஎம் கார்டை எடுத்து… ரூ 40,000 பணத்தை அபேஸ் செய்த குடிமகன்கள்…!!

மது வாங்கி கொடுத்து தொழிலாளியிடம் ஏடிஎம் கார்டை பறித்து பணம் திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் வேடர் புளியங்குளத்தில் வசித்து வரும்  வீரமணி(24) என்பவர் கப்பலூர் சிட்கோ பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி தோப்பூர் அருகில் உள்ள மதுக் கடைக்கு வீரமணி சென்றிருந்தார். அப்போது மதுக்கடைக்கு வந்த இரண்டு பேர் வீரமணிக்கு மது வாங்கி கொடுத்து அறிமுகமானார்கள்.

பின் மூன்று பேரும் சேர்ந்து இருந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென வீரமணி மயங்கி விழுந்துட்டார். உடனே வீரமணியிடம் இருந்த ஏ.டி.எம் கார்டு, பான் கார்டு, செல்போன் எல்லாவற்றையும் அந்த மர்ம நபர்கள் எடுத்து விட்டு ஓடினார்கள். மர்மநபர்கள் ஏ.டி.எம் யின் ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு ஏ.டி.எம்.மில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து விட்டார்கள்.

இதுதொடர்பாக வீரமணி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் நிலையூர்  பகுதியை சேர்ந்த சந்திரபிரபு(27), கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்த அழகுராஜா(24) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |