குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள 24 கிராமங்களில் மது அருந்துவோரை தண்டிக்கும் விதமாகஅவர்களை இரவு முழுவதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறையை நான் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு அகமதாபாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மது அருந்துவோருக்கு தண்டனையாக 1500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து குடிபோதையில் நடமாடும் நபர்களை இரவு முழுவதும் ஒரு கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறை அமல் படுத்தப்பட்டது. இது தற்போது மாநிலத்தின் 22 கிராமங்களில் உள்ள நாட் சமூக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கூண்டில் அழைக்கப்படும் அந்த நபர்களுக்கு ஒரு பாட்டில் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.