Categories
தேசிய செய்திகள்

மது அருந்திய மாப்பிள்ளை…. மணப்பெண் எடுத்த திடீர் முடிவு…. திருமணத்தன்று பரபரப்பு சம்பவம்….!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் வினோத் சுக்லா என்பவரின் மகள் நேஹாவுக்கும், நாகேந்திர மணி மிஸ்ரா என்பவரின் மகன் பியூஷ் மிஸ்ராவுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த நாளில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது மணமகன் குடிபோதையில் இருப்பது மணமகளுக்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ள மணமகள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மணமகளின் முடிவை முழுமையாக ஏற்றுக்கொண்ட பெண்ணின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினர். அதன்பின் காவல் நிலையம் சென்று பரஸ்பர ஒப்புதலுடன் பரிமாறப்பட்ட பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைத் திருப்பித்தர இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

Categories

Tech |