வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற சரவணன், வீரகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் ராஜிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணன், விக்னேஷ் மற்றும் வீரக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.