Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு தூங்கிய இளம்பெண்ணிற்க்கு மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி ..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதாக காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளது .

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ஹொரி கவுண்ட்டியை சேர்ந்த இளம்பெண் தன் நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு அந்த நண்பர் அங்கிருந்து கிளம்பியவுடன் மனவேதனை காரணத்தால் அப்பெண் அதிகமாக  மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் போதையிலேயே இரவு படுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது தன் ஆடைகள் சிதறி கீழே கிடந்ததை பார்த்தும் அவரருகில் 36 வயதான போரஸ்ட் ஜான்சன் என்ற நபர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னரே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்து கடந்த ஜனவரி 14 ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட  ஜான்சன் பிறகு $5000 பணத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |